என்றோ தொலைத்த ஒன்றை
இன்று தேடினேன்
அன்னையின் அரவணைப்பில்
தந்தையின் வழிகாட்டலில்
ஆசிரியரின் தூண்டுதலில்
தங்கையின் செல்ல சிணுங்கல்களில்
நண்பனின் நட்பில்
காதலின் கூடலில்
சூழ்நிலைகளின் மாற்றத்தில்
இயற்கையின் பிரம்மாண்டத்தில்
எங்கெங்கோ தேடி பின் அறிந்தேன்,,,
தொலைத்த இடம் என்னுள் என்று...
உணர்ந்த இக்கணம்,
என்(னுள்) தேடல் தொடங்கியது....