Pages

Friday, May 18, 2012

சிறு தூறல்

சிறு சிறு துளிகள்.... ஜன்னலின் மீது...
மண் வாசனை நுகர ஆசை,
மழைத்துளி சாரல் என் முகத்தை தொட்டுத் தழுவ ஆசை...
மழையில் அப்பாவும் நானும் நெடுந்தூரம் நடந்து சென்ற நாட்கள் மீண்டும் வர ஆசை...
பேயென மழை பெய்யும் பொழுது... கண்ணின் நீர்த்துளி மழையோடு கலக்க
வண்டியில் தங்கையுடன் அதி வேகமாக செல்ல ஆசை!!!
சேற்று தண்ணீரில் கோபி தாத்தாவுடன் கப்பல் விட ஆசை...
சுடச் சுட கோவைப் பாட்டி கையால்    பஜ்ஜி உண்ண ஆசையோ ஆசை...
எங்கள் ஊர் சிறுவாணியில் மழை சொட்ட சொட்ட தண்ணீரில் தவழ ஆசை...
இதெல்லாம் முடித்து வீடு திரும்புகையில் அம்மாவிடம் திட்டு வாங்க ஆசை...
ஆசைகள் யாரை விட்டன ?
ஆனால் இவை வெறும் ஆசைகள் அல்ல,,,,
என் நாட்களை இனிமையாய் செய்கின்ற நினைவுகள்...
நம்பிக்கையூட்டும் கனவுகள் :)

PS: words just came on a rainy day here in  a European train !

1 comment:

Kishore Kumar said...

உன் கனவுகள் அனைத்தும் இனிய நினைவுகள் ஆக ஆசை... :)